நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் இம்மாதம் வெளியாகவுள்ளது.
பாடல்கள் வெளியாகி இரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிற நிலையில், இப்படத்தின் ‘காந்த கண்ணழகி’ என்ற பாடலின் லிரிக்ஸ் காணொளி வரும் 6ஆம் திகதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.
இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். அனு இம்மானுவேல் ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர்களுடன் பாரதிராஜா, சமுத்திரக்கனி, அனு இமாணுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, சூரி, நட்டி நட்ராஜ், ஆர்கே சுரேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
டி.இமான் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது.