இந்திய விமானி அபிநந்தன் சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இதனால் ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்கள் உள்பட இந்தியாவே பரபரப்பில் இருந்தது.
ஆனால் போரினால் சுமூகமான தீர்வு எட்டாது என்று அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்ததும் இந்தியா முழுவதுமே அவரை புகழ்ந்தது.
இதுகுறித்து தற்போது பேசியுள்ள காமெடி நடிகர் சதிஷ், நம்மை அடிக்க ஆள் அனுப்பியவர் இம்ரான்கான். அவரின் நடவடிக்கையை என்னவென்று சொல்வீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நம் நாட்டை தாக்க வந்த பாகிஸ்தான் விமானத்தை விரட்டி அடித்துச் செல்லும் போது தான் அபிநந்தன் அங்கே விழுந்திருக்கிறார். அவரை விடுவித்த பாகிஸ்தானை பாராட்டும் தாங்கள் நம்மை அடிக்க ஆள் அனுப்பிய இம்ரான்கான் நடவடிக்கையை என்னவென்று சொல்வீர்கள்?!? https://t.co/QBngZMAHSg
— Sathish (@actorsathish) March 2, 2019