பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நந்தினி சீரியல் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நந்தினி சீரியல் முடிவுக்கு வந்தந்து ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சன் டீவியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காக இருப்பது அதில் ஒளிபரப்பாகும் தொடர்கள்தான். நந்தினி சீரியலின் வளர்ச்சிக்கு அதில் நடித்த நடிகைகளும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். நந்தினி சீரியலை பிரபல இயக்குனர் சுந்தர் சி தயாரித்திருந்தார்.
தற்போது நந்தினி சீரியல் முடிவுக்கு வந்ததை அடுத்து லட்சுமி ஸ்டோர் என்ற புது தொடரை சுந்தர் சி நிறுவனம் தயாரிக்கிறது. நடிகை குஷ்பூ இந்த தொடரில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில் நந்தினி சீரியலின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்று நந்தினி சீரியலின் தயாரிப்பாளரான குஷ்பு சுந்தரத்திடம் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு இப்போதைக்கு இரண்டாம் பாகம் இல்லை, ஆனால் நாளை என்ன நடக்கும் என்பது தெரியாது என பதிவு செய்துள்ளார்.