ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை நிஹாரிகா கொனிடெல்லா. தெலுங்கு நடிகையான இவர் இப்போது தான் சினிமாவில் படங்களில் நடித்து வருகிறார்.
அவர் நடிப்பில் தெலுங்கில் வந்த ஒக மனசு, ஹேப்பி வெட்டிங் படங்கள் ஹிட்டாவில்லை. இன்னும் தனக்கான இடத்தை பிடிக்காத நிலையில் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நடிகர் வருண் தேஜ் மற்றும் இவரின் நடிப்பில் சூர்யகந்தம் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதில் நடிகை நிஹாரிகா ஆபாசமான அர்த்தம் காட்டும் படியாக நடுவிரலை காண்பித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிஹாரிகா தெலுங்கு சினிமா மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி மகள் என்பது குறிப்பிடத்தக்கது.