பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய அவர் , “கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு விருது விழாவிற்கு சென்றிருந்தேன். அப்போது, என்னுடைய பவுன்சர்களை தாண்டி 15 வயது சிறுவன் ஒருவன் என்னை தொடக்கூடாத இடத்தில் தொட்டு என் கையை பிடித்து இழுத்தான். நான் அவனை பிடித்து விட்டேன். தப்பி ஓட முயன்றான்.
உடனடியாக எனது பாதுகாவர்கள் அவனை சுற்றி வளைத்து விட்டனர். அவனை அப்படியே கூட்டி சென்று, இப்படி செய்யலாமா..? இது தவறில்லையா..? என்று கேட்டேன். முதலில் நான் அப்படி செய்யவே இல்லை என்று உளறினான். பிறகு, தனது தவறை ஒப்புகொண்டு கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டான். அவனுக்கு சில அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்தேன். இது தவறு என்று கூடஅ அவனுக்கு யாரும் சொல்லவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.
பொது இடத்தில், 15 வயது சிறுவனால் நடிகை சுஷ்மிதா சென் பாலியல் சீண்டலுக்கு உள்ளான இந்த விஷயத்தை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து தான் போனார்கள்.