“சிந்து மேனன்”ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் பெரும்பாலும் தெலுங்கு, கன்னட, மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 1994 கன்னட திரைப்படமான “ரஷ்மி” என்ற படத்தில் ஒரு குழந்தைப் பாடகராக அறிமுகமானார்.
பின்னர் இவர் 15 வயதில் தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் திரைப்பட தொழில்துறையிலும் நடிக்க ஆரம்பித்தார்.மேலும் “பத்ராஜலம்”உத்தமந்த் சமுத்திரம்”ஆகிய படங்களில் இவர் நடித்தார்.இவர் 2006 மலையாள படமான “புலிஜென்மம்”என்ற படத்தில் பெண் நடிகையாக இவர் நடித்தார் . இந்த படம் 2007 இல் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.
இவர் மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் நடிக்க ஆரமித்தார். மேலும் 2009 ல், மலையான் படமான “பாரினா ஒன்னு மக்கள் மூன்னு” என்ற படத்தில் நடித்தார். பிரபல தமிழ் இயக்குனரான எஸ். சங்கர் தயாரித்த ‘ஈரம்’ படத்தில் நடித்துள்ளார்.தற்போது இவருக்கு படவாய்ப்புகள் அமையாததால் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்து வருகிறார்.