‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான அஞ்சலி, தொடர்ந்து பல வெற்றிப் படங்கள் மூலம் முன்னணி நடிகையான நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கியவர், ஆந்திர மாநிலத்தில் நடிகர் ஒருவரிடம் அடைக்களம் புகுந்தார்.
இதை தொடர்ந்து, பல ஆண்டுகளாக தமிழ் சினிமா பக்கமே தலை காட்டாத இருந்த அவர் தற்போது மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க தொடங்கிய நிலையில், அவரை பற்றி காதல் கிசுகிசுக்கள் பரவி வருகிறது. இருந்தாலும், அதை கண்டுக்கொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அஞ்சலி, உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் அதிரடி காட்டி வருகிறார்.
இந்த நிலையில், அஞ்சலி உடல் எடையை குறைப்ப்தற்காக உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ஆண்களை போல அஞ்சலி வெயிட் லிப்டிங் செய்யும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ,
#PauseSquats #LegDay ??♀️ pic.twitter.com/rPT1MqtMzv
— Anjali (@yoursanjali) March 14, 2019