தமிழ் சினிமாவில் நடிகை திரிஷாவும், நயன்தாராவும் ஒரே காலகட்டத்தில் நடிக்க வந்தவர்கள். இருவரும் நல்ல தோழிகள். சினிமாவில் உச்சத்தில் இருப்பவர்கள். திரிஷாவுக்கு அண்மைவில் வந்த 96 படம் பெரும் புகழை பெற்றுத்தந்துள்ளது. பிரேம் குமார் இயக்கிய இப்படத்தில் திரிஷாவுக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
இப்படத்தின் 100 வது நாள் விழா அண்மையில் நடைபெற்றது. இதில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கலந்துகொண்டார்.அதில் மேடையில் படக்குழுவை வாழ்த்தியதோடு பல நடிகைகளை தன் படங்களில் நடிக்க வைத்து அவர்களின் வாழ்க்கையை கெடுக்க நினைத்தேன்.
அதில் தப்பித்துக்கொண்டது திரிஷாவும், நயன்தாராவும் தான் என மேடையில் வேடிக்கையாக கூறினார். மேலும் நடிகைகளின் நடிப்பு திறனையும் பாராட்டினார்.