தமிழ் சினிமாவில் தனக்கென மிகப்பெரிய இடத்தை வைத்துள்ளவர் நடிகர் பிரகாஷ்ராஜ். ஹீரோ, வில்லன், குணசித்ர நடிகர் என பலகோணங்களில் நடித்துள்ளார் பிரகாஷ்ராஜ். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார் பிரகாஷ்ராஜ் அவர்கள்.
பிரகாஷ்ராஜின் முதல் மனைவி பெயர் லலிதா குமாரி. கே.பாலசந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் பிரகாஷ்ராஜை திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகினார்.