செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது ‘NGK’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அத்தோடு நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.