நடிகர் அருண் விஜய்யின் நடிப்பில் அடுத்ததாக தடம் படம் வருகிற 22ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை தடையற தாக்க படத்தை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.
இப்படம் தணிக்கை குழுவிற்கு சென்ற போது படத்திலிருந்து லிப் டு லிப் முத்தம் காட்சி ஒன்றை நீக்கியுள்ளனர். இதற்கு காரணமாக குழுவினர் கூறுவது, அருண் விஜய் நடிகைக்கு முத்தத்தை மட்டும் கொடுக்கவில்லை, உதட்டை கடித்து இழுத்தும் உள்ளார் என்பது தான்.
இதுகுறித்து இப்படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய அருண் விஜய், நான் முத்தம் மட்டும் தான் கொடுத்தேன். ஆனால் கேமிரா மேன் வைத்த ஆங்கிள் நான் உதட்டை கடிப்பது போல இருந்துள்ளது. இதற்காக அந்த குழுவினருடன் எவ்வளவோ பேசி பார்த்தேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை என சிரித்தப்படி கூறினார்.