நடிகர் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறிய, பிரபல இயக்குனர் சுசீந்திரனுக்கு அஜித் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய சுசீந்திரன், அவரது சமூக வலைத்தளத்தில் நடிகர் அஜித்துக்கு ஒரு கடிதம் எழுதி பதிவு செய்துள்ளார்.
அதில், “40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கின்றேன். இதுதான் 100 வீதம் சரியான தருணம் வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு. உங்களுக்காக காத்திருக்கும், பல கோடி மக்களில் நானும் ஒருவன்” என்று பதிவு செய்துள்ளார்.
இதற்கு அஜித் ரசிகர்கள் சிலர் வரவேற்றாலும், பலர் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். “அரசியல்வேண்டாம் அஜித்தேபோதும்” என்று அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் பதிவு செய்து, கண்டனங்களை தெரிவித்த வருகின்றனர்.
இதேவேளை, நடிகர் அஜித் சில தினங்களுக்கு முன்பு, அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.