பாலிவுட் சினிமாவின் இளம் நடிகை ஆலியா பட். இவருக்கு வரும் பட வாய்ப்புகள் போல நமக்கு வராதா என ஏங்கும் நடிகைகள் பலர் இருக்கிறார்கள்.
அப்படி சில வளர்ந்து வரும் நடிகைகளில் பேட்டிகளிலேயே வெளிப்படையாக கூறியுள்ளனர். இப்போது கூட ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட் நடிப்பில் வெளியான Gully Boy படம் வசூலில் மாஸ் வேட்டை நடத்தி வருகிறது. அப்ப வெற்றியால் ரீமேக் செய்யலாமா என்ற நினைப்பில் கூட பலர் உள்ளனர்.
சமீபத்தில் டெல்லியில் நடந்த தனது நெருங்கிய தோழியின் திருமண விழாவிற்கு சென்றுள்ளார் ஆலியா பட். அங்கு அவரது தோழியின் திருமணம் பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார். தற்போது அந்த ஒரு புகைப்படம் மட்டும் சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது.