தேவ் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் தான் கார்த்தி திரைப்பயணத்திலேயே மிகப்பெரும் தோல்வியை கொடுத்துள்ளது.
தேவ் சுமார் ரூ 11 கோடி வரை நஷ்டத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது, இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் படப்பிடிப்பில் மிகவுமே கஷ்டப்பட்டுள்ளார்.
அட பெரிய பட்ஜெட் கேட்கும் பணம் கிடைக்கின்றது, பெரிய நடிகர், நடிகைகள் இருக்க, பிறகு என்ன கஷ்டம் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது.
அது வேறு ஒன்றுமில்லை, இப்படத்தில் இயக்குனரிடம் கார்த்தி, ராகுல் ப்ரீத்சிங், ஏன் இரண்டு காட்சி நடித்த பிரகாஷ்ராஜ் வரை தலையிட்டு, கதையை மாற்ற சொன்னார்களாம்.
இதை இப்படி வைய்யுங்கள், அப்படி வைய்யுங்கள் என கூற, அவரும் அறிமுக இயக்குனர் என்பதால் அனைவர் ஸ்டைலிலும் படத்தை எடுத்து இப்படி வந்துவிட்டதாக கூறப்படுகின்றது.