நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் இன்னும் விறுவிறுப்பாக அமையவில்லை. அரசியலுக்கு வருகிறேன் என்றாரே தவிர அதற்கான வேலையில் நுழையவில்லை.
ரசிகர்களும் அவரிடம் அதைதான் அதிகம் எதிர்ப்பார்க்கிறார்கள். இதற்கு நடுவில் தான் அவர் தொலைக்காட்சி ஆரம்பிக்க இருக்கிறார் என்றனர். தற்போது சாமி தரிசனத்திற்காக நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி திருப்பதி சென்றுள்ளனர்.
அப்போது ஒரு பத்திரிக்கையாளர் தனுஷிடம், வரும் தேர்தலில் ரஜினி தனித்து போட்டியிடுகிறாரா அல்லது கூட்டணி அமைக்கிறாரா என்று கேள்வி கேட்ட, அதற்கு தனுஷ் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன், அரசியல் பேச மாட்டேன். ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவரே அறிவிப்பார் என்றார்.