பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவும், கணவர் நிக் ஜோனஸும் தேனிலவுக்கு எங்கு செல்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது காதலரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை கடந்த 1ம் தேதி ஜோத்பூர் அரண்மனையில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து டெல்லியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
டெல்லியை அடுத்து வரும் 20ம் தேதி மும்பையில் மீண்டும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக நிக் ஜோனஸ் குடும்பத்தார் மீண்டும் அமெரிக்காவில் இருந்து மும்பை வருகிறார்கள்.
ப்ரியங்கா சோப்ராவும், நிக் ஜோனஸும் தேனிலவுக்கு சுவிட்சர்லாந்துக்கு செல்கிறார்கள். அவர்கள் 28ம் தேதி சுவிட்சர்லாந்துக்கு கிளம்புகிறார்கள். லேக் ஜெனிவாவில் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். அவர்கள் ஒரு வாரம் அங்கு இருப்பார்கள் என்று அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
2018ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் திருமணத்தில் ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் திருமணமும் ஒன்று. தீபிகா, ரன்வீர் சிங் திருமணத்தை விட ப்ரியங்கா, நிக் ஜோனஸ் திருமணம் பற்றி தான் பலரும் கூகுள் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடரும் ப்ரியங்கா அமெரிக்காவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் கணவருடன் வசிக்க உள்ளார். பாலிவுட்டுடன் சேர்த்து ஹாலிவுட்டிலும் கவனம் செலுத்துகிறார். இதற்கிடையே நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ஆசையும் உள்ளதாம்.