அஜித்தின் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு விஸ்வாசம் படம் சிவாவின் இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் 8 வாரங்களை கடந்து தற்போதும் தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் பிளாக்பஸ்டராக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பினால் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த மார்ச் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதுவரை இப்படம் 2 கோடியை வசூல் செய்துவிட்டதாக கூறப்பட்டது.
ஆனால் உண்மையான நிலவரப்படி இப்படம் 1 கோடியை தான் ஈட்டியுள்ளதாம். மேலும் தெலுங்கில் B,C சென்டர்கள் அனைத்திலும் விஸ்வாசம் படத்தை நீக்கிவிட்டு அங்கு 2 மாதங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் F2 படத்தை திரையிட்டுள்ளனர் என கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
மேலும் விஸ்வாசம் படம் ஜகமாலா என்ற பெயரில் வருகிற 7ஆம் தேதி கன்னடத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.