இளையராஜாவின் எவர்க்ரீன் பாடல்களில் தென்றல் வந்து தீண்டும்போது பாடலும் ஒன்று. நாசரின் அவதாரம் படத்தில் இடம்பெற்றிருந்த இப்பாடலுக்கு தற்போது வரை ரசிகர்கள் ஏராளம்.
இதுபோன்ற மெலோடிகளை அமைத்து கொடுத்த இளையராஜாவுக்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளையராஜா-75 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஆனால் தற்போது இந்த தென்றல் வந்து தீண்டும்போது பாடலுக்கு இசையமைத்தது இளையராஜா தானா அல்லது அவரது மகன் கார்த்திக் ராஜாவா என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.
ரசிகர்களை தாண்டி இந்த கேள்வியை இயக்குனர் வெங்கட்பிரபுவே இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜாவிடம் கேட்டுள்ளார்.
‘The forgotten RAJA’ – I take this special moment to talk about #KarthikRaja and his timeless music ?https://t.co/Bl89kiVJRh@OpenPannaa @thisisysr #Ilayaraja pic.twitter.com/rhiyAEhseW
— S Abishek (@cinemapayyan) February 5, 2019
Not sure have to ask dad 🙂 but I think he did it… https://t.co/49V0K6lNlc
— Yuvanshankar raja (@thisisysr) February 5, 2019