சினிமாவில் தயாரிப்பாளர்களாகும் முடிவை நடிகைகளான காஜல் அகர்வாலும், தமன்னாவும் கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஜல் அகர்வால், தமன்னா இணைந்து சமீபத்தில் சொந்த படம் தயாரிக்கவுள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து இதற்காக கதை, இயக்குனரையும் தேர்வு செய்தனர்.
வெகுவிரைவில் தயாரிப்பு பணி தொடங்கிவிடும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இருவரும் பட தயாரிப்பிலிருந்து பின்வாங்கியிருக்கிறார்கள்.
திரைப்பட தயாரிப்புக்கான பணிகளை ஆரம்பித்த சில நாட்களிலேயே தமன்னா அதிலிருந்து விலகியிருந்தார்.
இதனையடுத்து காஜல் அகர்வாலும் குறித்த திட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.