பாலிவுட் நடிகை நேஹா தூபியா கடந்த மாதம் அவரது காதலன் அங்கட் பேடி என்பவரை அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார். ஆனால், நடிகை நேஹா துபியா திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகிவிட்டார் என்றும் இதனால் தான் அவசர அவசரமாக திருமணம் நடத்தப்பட்டது என்றும் கூறுகிறார்கள்.
ஒட்டு மொத்த பாலிவுட் திரையுலகமும் நடிகை சோனம் கபூரின் திருமணத்தின் மீது கவனத்தை வைத்துக்கொண்டிருக்கும் போது நேஹா துபியா தனது உறவினர்களை மட்டும் அழைத்து கமுக்கமாக திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் பாலிவுட் நட்சத்திரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இப்படி அவசர அவசரமாக திருமணம் நடக்க என்ன காரணம்..? ஒரு வேளை நேஹா கர்பமாக இருக்கிறார் என்ற செய்தி உண்மையாக இருக்குமோ.? என்று கிசுகிசுத்து வந்தனர்.
விஷயம் பூதாகரமாக வெடிக்கவே, நேஹா தூபியாவின் தந்தை இது குறித்த தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். திருமணதிற்கு முன்பே நேஹா கர்ப்பமாக இருந்தாள் என்பது தவறான தகவல். என்னுடைய மகளும், மருமகனும் அவர்களுடைய தொழில் மிகவும் பிசியாக உள்ளார்கள். கிடைத்த சிறு இடைவெளியில் திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்துவிடவேண்டும் என்று எண்ணியே அவசரமாக திருமணம் செய்தோமே தவிர வேறு எந்த காரணமும் இல்லை என்று கூறியுள்ளார்.