பாலிவுட் நடிகை நேஹா தூபியாவுக்கும் அங்கத் பேடி என்ற நடிகருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இத்திருமணத்தின் போது நேஹா கர்ப்பமாக இருக்கிறார், அதனால் தான் அவசர அவசரமாக இந்த திருமணம் நடக்கிறது என கூறப்பட்டது.
இதற்கு முதலில் நேஹா தரப்பில் இருந்து மறுப்பு தான் வந்தது. ஆனால் தற்போது டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அங்கத் பேடி, நேஹா கர்ப்பமானதால் திடீர் என்று திருமணம் செய்ததாக உண்மையை போட்டுடைத்தார்.
இது நேஹாவுக்கு கடும் கோபத்தை வரவழைத்துள்ளது. இது குறித்து பேசிய அவர், எங்கள் மகள் மெஹர் பிறந்த பிறகு எனக்கு தூக்கமே இல்லை. ஆனால் அங்கத் நன்றாக தூங்குகிறார். எதை யாருக்கும் தெரியாமல் வைத்திருக்க வேண்டுமோ அதை கூறிவிட்டார். அதுவும் நான் நடத்தும் நிகழ்ச்சியில் என்றார்.