பட வாய்ப்புகள் இல்லாததால் நடிகைகள் பலர் வெவ்வேறு தொழில்கள் செய்ய ஆரம்பித்துவிட்டனர். அப்படி பாலிவுட் நடிகை அமீஷா படேல் திருமணங்களில் நடனம் ஆடும் தொழிலில் ஈடுபட்டார், அதற்காக பல லட்சம் அவருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது.
கடந்த 2016ம் ஆண்டு ஒரு திருமணத்தில் நடனம் ஆட ரூ. 11 லட்சம் வாங்கியுள்ளார், ஆனால் திடீரென்று திருமண தேதியில் ரூ. 2 லட்சம் அதிகமாக கேட்டுள்ளார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பணம் தர மறுத்ததால் திருமணத்தில் நடனம் ஆடாமல் சென்றுவிட்டார், ஆனால் அதற்காக வாங்கிய ரூ. 11 லட்சத்தை தரவில்லை.
இந்த நேரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பவன் சர்மா என்பவர் நடிகை மற்று 3 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
பவன் சர்மா புகாரின் பேரில் அமீஷா மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ள மும்பை போலீசார், அமீஷா உள்ளிட்ட 5 பேரை மார்ச் 12 தேதி மும்பை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.