தமிழகத்தில் முன்னணி நடிகர்கள் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அவர்களின் கட் அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் எனும் பெயரில் ஆயிரக்கணக்கான லிட்டர் பாலினை வீணடிகின்றனர்.
இப்படி ஆயிரக்கணக்கான லிட்டர் பால் வீணாவதை பொறுத்துக்கொள்ள முடியாது என பால் முகவர்கள் சங்கம் பொங்கி எழுந்துள்ளது.
நாளை “பேட்ட” மற்றும் “விஸ்வாசம்” ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருப்பதால் பாலபிஷேகம் செய்வதற்காக கடைகளில் பால் திருடப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
இதனால் பால் முகவர்கள் தங்கள் பகுதியில் குழுவாக செயல்பட்டு சுழற்சி முறையில் நள்ளிரவு நேரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு பால் முகர்வர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது