இளைய தளபதி விஜய் தன்னுடைய ரசிகர்களுக்காக எப்போது ஆதரவாக இருக்கக் கூடியவர். இவர் இப்போது தனது 63வது படமான பிகில் பட வேலைகளில் பிஸியாக உள்ளார்.
படம் வரும் தீபாவளிக்கு மாஸாக ரிலீஸ் ஆக உள்ளது, இதற்கு நடுவில் விஜய்யின் 64வது பட விவரங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
இப்படத்தில் விஜய் ஒரு முரட்டு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கின்றனர். நடிகை ராஷி கண்ணா தளபதி 64 படக்குழுவினர் தன்னை அணுகியதாகவும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.