விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் தளபதி63 படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. சூப்பர்ஸ்டார் சிங்கர் புகழ் குழந்தை நட்சத்திரம் பூவையார் தளபதி63ல் ஒரு முக்கிய ரோலில் நடிக்க தேர்வாகியுள்ளார். நடிப்பது மட்டுமின்றி ஒரு பாடலும் அவர் பாடவுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளியானதில் இருந்து பூவையார் தான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்.