கடந்த 2011ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘வேலாயுதம்’ திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது.
கடந்த சில ஆண்டுகளாக விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்கும் இயக்குநர்கள் பட்டியலில் மோகன் ராஜாவின் பெயர் தவறாமல் இடம்பெற்று வருகிறது.
அந்தவகையில் விரைவில் மோகன் ராஜா, விஜய் படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுகிறது.
இந்த நிலையில் ‘கோமாளி’ படத்தின் புரமோஷனில் பேட்டி அளித்த ஜெயம் ரவி, ”விஜய்யும் மோகன் ராஜாவும் அவ்வப்போது தங்களது அடுத்த படம் குறித்து பேசி வருவதாகவும், விரைவில் விஜய்-மோகன்ராஜா கூட்டணி இணைந்து ஒரு படத்தை ரசிகர்களுக்கு தருவார்கள்” என்று கூறினார்.
அதேநேரம் இந்த படம் ‘தனி ஒருவன் 2’ படத்திற்கு பின்னரே உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். விஜய் – மோகன் ராஜா படம் உருவாக வாய்ப்புள்ளதால் இந்த படம் 2022இல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.