தளபதி 63 என்பது அட்லீ-விஜய் இணையும் மூன்றாவது படத்தின் தற்காலிக பெயர்.
படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் படு பிஸியாக உள்ளார்கள். ரசிகர்களுக்கு அப்டேட் கொடுக்கும் வகையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஏதாவது படம் குறித்து புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
இப்போது புதிய அப்டேட் என்னவென்றால் வரும் 21ம் தேதி படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அதுவும் சென்னையில் உள்ள பின்னி மில்லில் ஒரு செட்டில் தொடங்குகிறதாம்.
அந்த செட் வட சென்னை போல் உருவாக்கியுள்ளார்களாம். 20ம் தேதி செட்டிற்காக ஒரு ஸ்பெஷல் பூஜையும் நடக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது.