இளைய தளபதி விஜய்யுடன் புகைப்படம் எடுப்பது ரசிகர்களுக்கு ஒரு பெரிய கனவாக இருக்கிறது.
விஜய்யும் ரசிகர்களின் ஆசைக்கு ஏற்ப நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்களை ஒரு இடத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு உணவு கொடுத்து பின் புகைப்படம் எடுத்து அனுப்புவார்.
அதையெல்லாம் நாம் பார்த்திருப்போம், இப்படி சாதாரண மக்களுக்கு இருக்கும் ஆசை அப்படியே சினிமா பிரபலங்களிடமும் உள்ளது.
அண்மையில் ஒரு பேட்டியில் தொகுப்பாளினி டிடி விஜய்யுடன் முதன்முதலாக புகைப்படம் எடுக்க அனுபவத்தை கூறியுள்ளார்.
அதில் துப்பாக்கி படப்பிடிப்பில் அவருடன் முதன்முதலாக புகைப்படம் எடுத்தேன். அவரின் கேரவனுக்குள் போனதும் அன்பாக விஜய் என்னை அழைத்தார், நான் உடனே உணர்ச்சிவசப்பட்டு நீங்கள் படம் நடித்தால் மட்டுமே போதும், அதை ஹிட் ஆக்குவது எங்களது கடமை என்றேன்.
அதை எதற்கு அவர் முன் கூறினேன் என்று தெரியவில்லை, ஆனால் விஜய் அவர்கள் அதற்கும் அழகாக சிரிப்பை வெளிப்படுத்தினார் என்றார்.