விஸ்வாசம் படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் உள்ளார்கள். படம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 125 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலே வந்துவிட்டது.
இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்கள் ரசிகர்கள். இப்படத்தை தொடர்ந்து அஜித் தீரன் பட புகழ் வினோத் இயக்கத்தில் பாலிவுட்டின் ஹிட் படமான பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இம்மாத கடைசியில் அல்லது அடுத்த மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.
அஜித்தின் இந்த 59வது படத்தில் பாலிவுட் நாயகி வித்யா பாலன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அவருக்கு ரீமேக் படத்தில் நடிக்க பிடிக்காதாம், முதலில் படத்தில் நடிக்க முடியாது என்று கூறிய வித்யா பாலன் பின் போனி கபூர் அவர்கள் கேட்டுக் கொண்டதால் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.