விஸ்வாசம் படம் சினிமா பிரபலங்களையும் மிகவும் கவர்ந்துவிட்டது. ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களையும் கொண்டாட வைத்துவிட்டது. சரியான போட்டியில் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக படம் வெளியானது.
இன்னும் பல இடங்களில் விஸ்வாசம் படத்திற்கு தியேட்டர்களில் கூட்டம் இருப்பதை காணமுடிகிறது. வசூலும் ரூ 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இன்னும் இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இப்படத்தை லொள்ளு சபா புகழ் பிரபல காமெடியன் சுவாமி நாதன் பார்த்து மிகவும் உணர்ச்சிவசமாகி விட்டதாக அவரின் மகள் கூறியுள்ளார்.