சமூகவலைதளம் பக்கம் சென்றாலே தற்போது விஸ்வாசம் படம் பற்றிய வசூல் விமர்சனங்கள் தான். இப்படம் ரூ 125 கோடியை தாண்டியுள்ளது. 8 நாட்களில் விஜய் நடித்த சர்கார் படத்தின் சாதனையை விஸ்வாசம் முந்தியது.
அதே வேளையில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்துடன் தான் இப்படத்திற்கு போட்டி. இரு படங்களுமே நல்ல வசூலை அள்ளி வருகிறது. ஆனால் தயாரிப்பு நிறுவனமும், விநியோகஸ்தரும் விஸ்வாசம் படத்தின் உண்மையான வசூலை கூறிய பிறகும் அதை ஏற்க சிலர் மறுக்கிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு டப்பிங் வெர்சன் வரும் ஃபிப்ரவரி 1 ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கிலும் அஜித்திற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.