அஜித் பேட்டிகள் எல்லாம் இப்போது கொடுப்பது இல்லை. ஆனால் இதற்கு முன் அவர் கொடுத்த பேட்டிகளை கவனித்தால் முதலில் அவர் சொல்வது எல்லோரும் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்பது தான்.
அதை எப்போதுமே தன்னுடைய படங்களிலும் கூறி வந்தார். இப்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள விஸ்வாசம் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்திருக்கிறது. எல்லோரும் இதுபோல் ஒரு படம் பார்த்து நீண்ட வருடம் ஆகிவிட்டது என்கின்றனர்.
படமும் பாக்ஸ் ஆபிஸில் பட்டய கிளப்புகிறது, அதிலும் கிராம பகுதிகளில் படத்திற்கு நல்ல வரவேற்பாம். படம் வெளியான 9வது நாளில் கூட 3 ஷோக்கள் முடிந்து 4வது ஷோவும் ஹவுஸ் புல்லாக டிக்கெட் புக்கிங் நடக்கிறதாம் திண்டிவனத்தில், இந்த புக்கிங் விவரம் ரோஹினி சினிமாஸ் உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா வெளியிட்டுள்ளார்.
BLOCKBUSTER ALERT: #Viswasam rocking the BO at #Tindivanam @RohiniSilverScr 3 out of 4 houseful shows yesterday (9th day working day).
— Nikilesh Surya (@NikileshSurya) January 19, 2019