நடிகர் அஜிதின் ‘AK60’ திரைப்படத்தில் இணையும் கதாநாயகியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்தவகையில் இத்திரைப்படத்தில் ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதேநேரம் இத்திரைப்படத்தின் கதாநாயகி எனவும் கூறப்படுகிறது.
ஏற்கனேவ ஹிந்தியில் தடாக் என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகிய இவர் தமிழில் ‘AK60′ படத்தின் மூலமாக அறிமுகமாகவுள்ளாராம்.
இந்த படத்தையும் மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தான் தயாரிக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. இம்மாத இறுதியில் ‘AK60’ திரைப்படத்தின் படத்திற்கான பூஜை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ‘AK60’ திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, அஜித் நடிப்பில் வரும் 8ஆம் திகதி உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகவுள்ளது.