சினிமாவில் ஒரு தனி நட்சத்திரம் சிம்பு. குழந்தை பருவ வயதிலிருந்திருந்தே சினிமாவில் நடிக்க தொடங்கியவர். பல படங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர்.
இன்னும் சொல்லப்போனால் அவரின் அப்பா டி.ராஜேந்தர் போல துடிப்பாக செயல்பட்டு வருகிறார். பீப் பாடல் பிரச்சனை என சிக்கலை சந்தித்த பின் அவரின் படத்திற்கு ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.
சினிமாவில் அவரின் AAA படத்தால் நஷ்டமானதாக குற்றச்சாட்டுகள் வந்த போதும் அவர் பொறுமையாக சமாளித்து வந்தார். படங்களிலும் நடித்து வருகிறார்.
காவிரி நீர் பிரச்சனை விசயத்தில் அவர் ஒரு டம்ளர் நீர் கொடுக்க சொன்னதற்கு பெரும் ஆதரவு இருந்தது. இந்நிலையில் அவரின் சினிமா பயணம் 35 ம் வருடத்தை எட்டியது. இதனை நேற்று ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
இந்நிலையில் அவரின் தோழரும் பிக்பாஸ் சீசன் 2 பிரபலமுமான மஹத் தலைவன் STR. என் நண்பனுக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
அவருடன் இருந்த சக போட்டியாளர் ஐஸ்வர்யா தத்தாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
More years to go … Congratulations STR FIR #35YEARSOFSTR in cinema .. https://t.co/NR5NDdE5EP
— Aishwarya dutta (@Aishwaryadutta6) July 7, 2019