ஷகிலா என்றால் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவும் திரும்பி பார்க்கும். அவருக்கு அப்படியான ஒரு பெரும் வரவேற்பு இருந்தது. படங்களில் நடிக்க ஒரு சக நடிகை போல தான் வந்தார்.
ஆனால் ஆபாச பெண் என்பது போல அவர் மீது முத்திரை பதிந்தது. அவரின் படங்கள் வந்தால் ஹீரோக்கள் படங்கள் கூட வெளியாக தயங்கும். சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றுள்ள அவரின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இதில் ரிச்சா சத்தா என்பவர் ஷகிலாவாக நடித்து வருகிறார்.
அண்மையில் அவர் பேட்டி கொடுத்திருந்தார். இதில் அவர் நான் 15 வயதிலிருந்தே நடிக்க தொடங்கிவிட்டேன். ஆனால் குடும்பத்துக்காகவே கவர்ச்சியாக நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
ஆனால் என்னுடைய குடும்பத்தில் இருந்த ஒருவரே என்னை ஏமாற்றி நான் சம்பாதித்த பணத்தை பிடுங்கி கொண்டார். நிறைய காதல் தோல்விகளும் கூட. இதனால் தற்கொலை கூட செய்ய முடிவெடுத்தேன்.
வீட்டில் இருக்கும் போது நான் கமல்ஹாசனின் படங்களை தான் பார்ப்பேன். அவரின் ரசிகை நான். அவருடைய கட்சியிலும் சேர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பம் இருக்கின்றது என கூறியுள்ளார்.