இந்தி திரையுலகின் முன்னணி நடிகரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சன் நெட்டிசன் ஒருவரின் ட்விட்டுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பதிலளித்துள்ளார்.
அதில் அந்த நெட்டிசன் மாதவனின் மின்னலே என்ற பிளாக்பஸ்டர் படம் கடந்த 2018ல் இதே நாளில்(பிப்ரவரி 18ஆம் தேதி) வெளியானது. அப்போது எனக்கு 18 வயது தான் என சில எமோஷ்னலான வார்த்தைகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு மென்ஷனே செய்யாமல் அபிஷேக்பச்சன், நானும் இந்த படத்தை ஒரு சமயம் ஊட்டியில் படப்பிடிப்பு நடந்தபோது பார்த்தேன். இன்னமும் இப்படத்தின் பாடல்களை கேட்கிறேன் என ட்விட் செய்து அந்த நெட்டிசனுக்கு ஷாக் கொடுத்தார்.
அபிஷேக்கின் இந்த பதிலுக்கு, மின்னலே பட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், So sweet of you Mr.Abhishek என தனது பங்கிற்கு அவரை பாராட்டியுள்ளார்.
@ActorMadhavan 18th Feb 2001, the date of Tamil blockbuster #Minnale released. It’s has been 18 years, still the movie , songs and most importantly love look fresh in our heart. We need #Minnale2 @menongautham @Jharrisjayaraj pic.twitter.com/0zi2c9n2KZ
— magi™ (@mageshmagi) February 18, 2019