தமிழ் சினிமா இந்த வருடம் ஆரம்பமே விஸ்வாசம், பேட்ட என இரண்டு மெகா ஹிட் படங்களுடன் தொடங்கியது. ஆனால், அதை தொடர்ந்து ஹிட் அடித்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இதில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் மற்றும் காஞ்சனா3 படமே பெரிய அளவிற்கு வசூலை கொடுத்தது, அதன் பிறகு மிக மோசமான நிலைக்கு தமிழ் சினிமா சென்றது.
இந்த நேரத்தில் தான் ஸ்பைடர் மேன் படம் வந்து கொஞ்சம் வசூலை அதிகரித்துள்ளது, இப்படம் தமிழகம் முழுவதும் ரூ 5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.
மேலும், இந்தியா முழுவதும் இப்படம் ரூ 60 கோடி வசூலை கடந்துவிட்டது.