2019 வருட ஆரம்பமே தமிழ் சினிமாவின் பெரிய நடிகர்களான அஜித்-ரஜினி படங்கள் மோதியது. பேட்ட, விஸ்வாசம் இரண்டிற்குமே ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது உண்மை.
வசூலிலும் இப்படங்கள் கலக்கிறது, இன்னும் விஸ்வாசம் படம் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடுகிறது, காரணம் படத்தின் அழுத்தமான கதை. இந்த வாரம் ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ள LKG படம் வெளியாக இருந்தது.
படத்திற்கான புரொமோஷனில் ஒரு பேட்டியில் பாலாஜி பேசும்போது, நாங்கள் பொங்கலுக்கு வரலாம் என்ற தான் இருந்தோம்.
ஆனால் பெரிய நடிகர்களான அஜித்-ரஜினி படங்கள் வருவதால் பின் வாங்கிவிட்டோம். அவர்களுடன் மோதுவது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் என்று பேசியுள்ளார்.