சிவா, அஜித்தை வைத்து இயக்கிய படங்களிலேயே படு வெற்றிகரமாக ஓடும் படம் விஸ்வாசம். இவர்களது கூட்டணியில் வந்த 3 படங்களுக்கும் இல்லாத அளவிற்கு இப்படம் மாஸான வரவேற்பை பெற்றுள்ளது.
ரூ. 200 கோடியை நெருங்கி வரும் இப்படத்தை பிப்ரவரி 14ம் தேதி வரை திரையிட பல திரையரங்க உரிமையாளர் முடிவு செய்துள்ளனர், காரணம் படத்திற்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு தான்.
இன்று சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், ஜி.வி. பிரகாஷ் நடித்திருக்கும் சர்வம் தாளமயம் போன்ற படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆனாலும் அஜித்தின் விஸ்வாசம் தமிழ்நாட்டில் 276 திரையரங்குகளில் ஓடுகிறதாம்.