தமிழ்த் திரையுலகில் முன்னணி கதாநாயகர்கள் நடித்த படங்களுக்கு பாடலாசிரியராக பணியாற்றிய முத்துவிஜயன் இன்று (சனிக்கிழமை)காலமானார்.
இதுவரை சுமார் 800இற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள இவர்,கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…, மேகமாய் வந்துபோகிறேன்… உள்ளிட்ட காதல் பாடல்கள் மூலம் இரசிகர்களை தன்வசப்படுத்தினார்.
அத்துடன், பாடலாசிரியர், வசனகர்த்தா, உதவி இயக்குனர் என பன்முகம் கொண்டவராகவும் தமிழ் சினிமாவில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரின் பிரிவு இரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.