ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் கோலப்புடி ஸ்ரீனிவாஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1998ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதில் இந்தியாவின் அனைத்து மொழித் திரைப்படங்களும் பங்கு பெறுவதுண்டு.
அவ்வகையில் இவ்வாண்டின் கோலப்புடி ஸ்ரீனிவாஸ் விருதின் அறிமுக இயக்குநர் விருதினை ’96’ திரைப்படத்தை இயக்கிய பிரேம்குமார் பெற்றுள்ளார்.
இதற்கு முன் கடந்த 2001ஆம் ஆண்டு வெளிவந்த ‘குட்டி’ என்ற திரைப்படத்திற்காக ஜானகி விஸ்வநாதன் என்பவர் இந்த விருதினை பெற்றார்.
அதன்பின் 18 ஆண்டுகள் கழித்து ’96’ திரைப்படம் தமிழுக்கு இந்த விருதை பெற்றுக் கொடுத்துள்ளது. ரூ.1.5 இலட்சம் பணம் மற்றும் சான்றிதழ் இயக்குநர் பிரேம்குமாருக்கு வரும் ஓகஸ்ட் மாதம் விருதாக வழங்கப்படும்.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த பிரேம்குமார், ’96’ படத்தின் மூலம் இயக்குநரானார். இந்த படம் அனைத்து தரப்பினர்களாலும் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.