தமிழக பா.ஜ.க. தலைவராக செயற்பட்டு வந்த தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜனுக்கு கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், “ஒரு தமிழ் பெண்மணி ஆளுநராவது பெருமிதம் தருகிறது. தமிழுக்கும் தெலுங்குக்கும் இசை பாலமாகத் திகழும் என்று நம்புகிறேன். தமிழிசையை வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.