நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து ஆந்திராவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘துவாரகா’ திரைப்படம் தமிழில் வெளியாக உள்ளது.
தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட இத்திரைப்படத்திற்கு ‘அர்ஜுன் ரெட்டி’ என்று பெயர் வைத்துள்ளனர்.
இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா, பூஜா ஜாவேரி, பிரகாஷ் ராஜ், பிரபாகர், முரளி, சர்மா, சுரேகா ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை ஸ்ரீநிவாச ரவீந்திரா இயக்கியுள்ளார். சாய் கார்த்திக் இசையமைப்பில், நெல்லை பாரதி தமிழில் பாடல்கள் எழுதியுள்ளார்.
திருடனாக இருக்கும் விஜய் தேவரகொண்டா, காதலித்து பிறகு எப்படி மாறுகின்றார் என்பதே படத்தின் கதையாகும்.