‘பட்லா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிங்க் படத்தை தொடர்ந்து அமிதாப்பச்சன் – டாப்சி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘பட்லா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் திரிஷா நடிக்கவுள்ளார்.
ஹிந்தியில் டாப்சி வேடத்திலேயே அவர் நடிப்பதாக கூறப்படுகிறது.
அமிதாப்பச்சன் – டாப்சி நடித்து இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படம் தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.
இதில் அஜித்குமார், வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கின்றனர். எச்.வினோத் இயக்குகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.
திரிஷா நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த 96 படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்தப் படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆகிறது.
மேலும் பேட்ட படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்திருந்ததுடன், கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 1818, பரமபத விளையாட்டு ஆகிய 4 படங்களில் தற்போது திரிசா நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.