இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகும் சிவப்பு, மஞ்சள், பச்சை திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகையான லிஜி மோள் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.
சித்தார்த் மற்றும் ஜி.வி பிரகாஷ் இணைந்து நடிக்கும் இந்த திரைப்படம், அக்கா, தம்பியின் பாசப்பிணைப்பை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ஜி.வி பிரகாஷின் அக்காவாக அவர் அறிமுகமாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
லிஜி மோள் நடித்துள்ள மலையாள திரைப்படங்களான “மகிஷிண்டே பிரதிகாரம்“, “கட்டபனையில் ஹிரித்திக் ரோஷன்“ ஆகிய திரைப்படங்கள் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பபை பெற்றமை குறிப்பிடத்தக்கது.