தனுஷ் மற்றும் சாய் பல்லவி ஆடிய ரவுடி பேபி பாடல் இன்னும் பலரின் மனங்களில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கின்றது. அண்மையில் வந்த மாரி 2 படத்தில் வந்த இந்த பாடல் நம் எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு வித மேஜிக் செய்துவிட்டு போய்விட்டது.
இப்பாடலின் வெற்றிக்கு காரணம் யுவனின் இசை, பிரபுதேவாவின் நடன அமைப்பு, சாய் பல்லவியின் டான்ஸ், தனுஷின் வாய்ஸ் என பல விசயங்கள் இதில் அடங்கி உள்ளது. டிக்டாக்கில் கூட இந்த பாடல் குறித்த விசயம் அதிகம் இடம் பெற்றது.
மேலும் யூடுப்ல் 255 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனையில் முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில் Gaana என்ற செயலில் மட்டும் இந்த பாடல் 10 மில்லியன் Playouts செய்யப்பட்டுள்ளதாம்.
தற்போது இந்தப்பாடல் எவ்வாறு உருவாகியது என்பதை வீடியோ வடிவில் படக்குழு வெளியிட்டுள்ளது.இப்போது மீண்டும் இது வைரலாகி வருகின்றது.அதன் வீடியோ இணைப்பு கீழே.