தனுஷ் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர். இவர் சிறந்த நடிகர் என்பதை தாண்டி சிறந்த படங்களை தயாரித்தும் உள்ளார்.
இவர் தயாரிப்பில் இதுவரை வேலையில்லா பட்டதாரி, நானும் ரவுடி தான், எதீர்நீச்சல், காக்கா முட்டை, விசாரணை, மாரி-2 போன்ற படங்கள் வந்துள்ளது.
ஆனால், சமீப காலமாக இந்த நிறுவனத்தின் கீழ் வந்த படங்கள் ஒரு சில தோல்வியடைந்தது.
அதுமட்டுமின்றி அந்த நிறுவனத்தை தனுஷ் ஒருவரை நம்பி தான் விட்டு போனாராம், அவர் தனுஷிற்கு தெரியாமல் பல விஷயங்கள் செய்ய, கோபமாக தனுஷ் வொண்டர்பார் நிறுவனத்தை மூடவுள்ளதாக ஒரு செய்தி கசிந்துள்ளது, இவை எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை.