இயக்குநர் கார்த்தி சுப்புராஜ், நடிகர் தனுஷ் இணையவுள்ள புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகின்றார்.
இந்த இரண்டு படங்களுக்கு பிறகு கார்த்தி சுப்புராஜ் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முதல் முறையாக இணையும் இந்த கூட்டணியில் தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கவுள்ளார்.
இத்திரைப்படத்தின் ஏனைய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.