சினிமாவில் பல படங்கள் அதிக பணத்தில் தயாரிக்கப்படுகிறது என்றால் சில படங்கள் குறைந்த பட்ஜெட்டிலேயே முடித்து கொள்ளப்படுகின்றன
அப்படி தான் கோலிவுட்டில் பல தரமான படங்களை தந்த சேரனின் இயக்கத்தில் திருமணம் என்ற படம் அடுத்ததாக வெளியாக உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் நடந்து முடிந்தது.
இந்த விழா நடந்த கமலா திரையரங்கு உள்ள ஏரியாவை சுற்றிலும் இரவு முழுவதும் சிலருடன் சேர்ந்து சேரன் போஸ்டர்களை ஒட்டியுள்ளார். மேலும் இசை வெளியீட்டு விழாவிற்காக அந்த திரையரங்கையே ஒரு திருமண மண்டம் அளவிற்கு வடிவமைத்திருந்தனர்.