கடந்த வாரம் வெளியான ‘டியர் காம்ரேட்’ படத்தில் ஒருசில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை மந்தனா ராஷ்மிகா நடிப்பில் உருவான ‘டியர் காமிரேட்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்டது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாகியது.
குறித்த படத்துக்கு இரசிகர்கள் வரவேற்பினை வழங்கியிருந்த போதிலும் சுமார் மூன்று மணி நேரம் இருக்கும் இப்படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமென பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து படக்குழுவினர், இந்த படத்திலுள்ள 14 நிமிடங்கள் காட்சியை நீக்கியுள்ளனர்.
குறிப்பாக பிரபல்யமான கேன்டீன் பாடல் நீக்கப்பட்டுள்ளதாகவும் கதைக்கு சம்பந்தம் இல்லாத ஒருசில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.